பாரத திருநாட்டின் தலைநகரம் டெல்லியில் நடைபெற்ற விழாவில், சிறந்த ஊராட்சிக்காகவும், மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த ஊராட்சி தலைவருக்கான உத்தமர் விருதை, தமிழின முதல்வர் வைகோ அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், திருப்பூர் மாவட்ட மதிமுக துணைச் செயலாளர், மாதப்பூர் ஊராட்சி தலைவர், களத்தில் கலகலப்பாக களமாடி வெற்றி கண்ட சிங்கம், ஆருயிர் சகோதரர் முத்துரத்தினம் அவர்கள் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சரிடம் பெற்றுக்கொண்டார்.
சகோதரர் அவர்கள் இதே போல நற்பணிகள் பல செய்து கழகத்தின் பெயரை நிலைநாட்டவும், மேலும் பல சாதனைகளை படைத்து பல உயர் விருதுகளை பெறவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment