Saturday, July 4, 2015

SG சேகர் நினைவேந்தல் மற்றும் 22ஆம் ஆண்டு துவக்க பொதுக்கூட்டம்!

மதிமுக முன்னாள் திருவொற்றியூர் நகர செயலாளர் SG சேகர் அவர்களின் முதலாம் நினைவேந்தல் மற்றும் மதிமுகவின் 22ஆம் ஆண்டு துவக்க பொதுக்கூட்டமும் சென்னை திருவொற்றியூர் நகரக் கழகம் சார்பாக,சாத்தாங்கோடு நெடுஞ்சாலை, ராஜா கடையில் நடைபெற்றது. இதில் செயல்வீரன் எஸ்.ஜி.சேகர் அவர்களின் கல்வெட்டை திராவிடத் தென்றல் திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன் திறந்து வைத்தார்..

கழகத் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் கழக கொடியேற்றினார். பின்னர் திருவொற்றியூர் முன்னாள் நகரக் கழகச் செயலாளர் எஸ்.ஜி.சேகர் அவர்களுக்கு அண்ணன் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் நினைவஞ்சலி நடைபெற்றது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொள்கை விளக்க அணியின் துணை செயலாளர் கனல் காசிநாதன் அவர்கள் உரையாற்றுகிறார். தொடர்ந்து வைகோவின் வானம்பாடி ஆவடி அந்தரிதாஸ், மல்லை சத்யா என அனைத்து தலைவர்களும் உரையாற்றினர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment