தாயகத்தில் இருந்து தமிழின தலைவர் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி புயல் அண்ணன் " வைகோ " அவர்கள் அலைபேசி முலமாக வாழ்த்துரை வழங்கினார்கள். குவைத் மறுமலர்ச்சி திமுக ( வைகோ பாசறை ) நடத்திய புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அய்யா திருச்சி கண்ணையன் அவர்கள் நினைவரங்கத்தில் .குவைத்தில் மிர்காப் நகரில் திருச்சி உணவகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. 16.07.2015. வியாழன் கிழமை அன்று மாலை 06.00.மணியவில் அமைப்பாளர் அரிமா.பின்னலூர் மு.மணிகண்டன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைமையுரையற்றினார். முன்னிலை தலைவர்.வடலூர் கோவி. தண்டாயுதபாணி. செயலாளர் பெரம்பலூர் பெரு.சீனிவாசன். அவர்களும் வரவேற்புரை. ஆலோசகர்.பெரம்பலூர் அ. அசன் முகமது அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பு பெரியார் நூலகத்தின் தோழர் ரகமத்துல்லா (எ) நெறியாளன் அவர்கள். உரைவீச்சாளர்கள், கலிங்கம்பட்டி முதல் ஈழம் வரை என்ற தலைப்பில், கவிஞர்.இராவணன் அவர்கள். வைகோ வின் எழுத்தும் செயற்பாடு என்ற தலைப்பில் கவிஞர் பட்டுக்கோட்டை சத்தியன் அவர்கள். அறிஞர்கள் பார்வையில் இஸ்லாம் என்ற தலைப்பில் கவிஞர் சா.சாதிக் பாட்சா அவர்களும் மிக சிறப்பாக உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சி க்கு வந்து இருந்த நமது சகோதர்கள். கழகத்தின் கண் மணிகள் மற்ற அமைப்புக்களிள் இருந்து வருகை தந்து இருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் நோம்பு திறப்பு இப்தார் விருந்தோம்பல் நிகழ்ச்சியும் மிகசிறப்பாக நடைபெற்றது.
குவைத் நாட்டின் நேரத்துக்கவும், இந்திய நேரம் மாலைப்பொழுது மிக ஆதிகமான போதிலும் தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி தாயகத்தில் இருந்து கைபேசி வழியாக கழகத்தின் பொதுசெயலாள்ர் புரட்சி புயல் அண்ணன் வைகோ அவர்கள் புனித இப்தார் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கியது அரங்கத்தில் உள்ள அனைவரையும் இன்ப தேன் ஆற்றில் நீந்தவிட்டிருந்தது. எங்களின் இதயத்தில் நிறைந்து இருக்கும் அண்ணன் புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு என் சார்பாகவும் குவைத் மதிமுக. வைகோ பாசறை யின் தோழர்களின் சார்பாகவும், நிகழ்ச்சிக்கு வந்து இருந்த குவைத் வாழ் தமிழர்களின் சார்பாகவும், எங்களின் மிக்க நன்றினை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என பின்னலூர் மு மணிகண்டன் மதிமுக அவர்கள் தெரிவித்தார்கள். தலைவா ! . நன்றி ! நன்றி !! .
நிகழ்ச்சி க்கு முன்பாக பின்னலூர் மு மணிகண்டன் மதிமுக அவர்களின் கைபேசியின் மூலலாமாக எங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அண்ணன் நெய்வேலி மு.செந்திலதிபன். அண்ணன் அருணகிரி. தம்பி பிரசாந்த், சிங்கப்பூர் வைகோ பாசறை யின் தோழர் துவார்.பொன். சுப்பையா. சென்னையில் இருந்து வலைதளம் நண்பர்கள். கவிஞர் இரவிச்சந்திரன். பல்லாவரம் சம்பத் . கீரை ஒன்றிய செயலாளர் அரிமா. இரா.தில்லை. அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடேசன் . பணியின் நிமிர்தமாக வரமுடியாமல் தவிற்த தம்பி ஆலோசகர் விளத்திகுளம் த.செல்வக்குமார், இவர்கள் அனைவருக்கும் .என் மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு நன்றி ! . நன்றி.!! யைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார் பின்னலூர் மு மணிகண்டன் மதிமுக. நிகழ்ச்சியின் முடிவாக நன்றியுரை கோவில்பட்டி சீனிவாசன், கலிங்கப்பட்டி கனகராஜ்.
செய்தி சேகரிப்பு: அரிமா பின்னலூர் மு மணிகண்டன் மதிமுக, குவைத் வைகோ பாசறை.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment