தகுதி அற்ற தறுதலைகளை தினமலர் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவது அவர்கள் உரிமை.ஆனால் பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவரை, அப்பழுக்கற்ற நேர்மையாளர், கறைபடியாத கரத்துக்கு சொந்தமானவர், பதவியை பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு சேர்க்காத ஒப்பற்ற தலைவரை, பார்ப்பன தினமலர் ஏடு தகுதி இல்லாதவர் என்று எழுதுவது பச்சை திமிர் இல்லாமல் வேறு என்ன? என்று மதிமுகவின் ஆய்வு மையச் செயலாளர் செந்திலதிபன் சவுக்கடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தினமலர் ஏடு வைகோ அவர்களைப் பற்றி அவதூறாகச் செய்தி எழுதியது. இது தொடர்பாக வைகோ அவர்கள் மதிமுகவின் வார ஏடான சங்கொலியில் “தகுதி அற்றவன்” என்ற தலைப்பிட்டு தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதைச் சுட்டிக்காட்டி முகநூலில் செந்திலதிபன் தினமலருக்கு சவுக்கடி கொடுத்துள்ளார். அவர் எழுதியுள்ளது இதோ...
மதிமுகவின் வார ஏடான சங்கொலியை (24.07.2015), கழக இணையதளப் பக்கத்தில் படித்தேன். தலைவர் வைகோ அவர்கள், “தகுதி அற்றவன்”என்ற தலைப்பு இட்டு எழுதி உள்ள ஆறரை பக்க மடல் நெஞ்சை நெகிழ செய்து விட்டது. பார்ப்பன கொழுப்பை மையாக நிரப்பி பத்திரிக்கையில் எழுதி வரும் தினமலர் தன்னைப் பற்றி செய்துள்ள அவதூறு செய்திக்கு தலைவர் வைகோ அவர்கள் தக்க பதிலடி தந்திருக்கிறார்.
தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் சாய்ந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கின்ற தலைவர் என்பதால், தமிழ் இன உணர்வும் மொழி உணர்வும், பண்பாட்டு உணர்வும் பட்டுப்போகாமல் காப்பாற்றி வரும் தலைவர் என்பதால் ஆரிய நச்சு, பாசிச தினமலருக்கு தலைவர் வைகோ என்றால் கிள்ளுக்கீரை?
தகுதி அற்ற தறுதலைகளை தினமலர் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவது அவர்கள் உரிமை. ஆனால் பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவர், அப்பழுக்கற்ற நேர்மையாளர், கறைபடியாத கரத்துக்கு சொந்தமானவர், பதவியை பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு சேர்க்காத ஒப்பற்ற தலைவரை, பார்ப்பன தினமலர் ஏடு தகுதிஇல்லாதவர் என்று எழுதுவது பச்சை திமிர் இல்லாமல் வேறு என்ன?
ஆம் வைகோவுக்கு தகுதி இல்லைதான்...
– அரசியலில் கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதுதான் தகுதி என்றால் அந்த தகுதி வைகோவுக்கு இல்லை.
– வாரிசு அரசியல் தான் தமிழ்நாட்டில் தகுதி என்றால் அது வைகோவிடம் இல்லை.
– கொள்கையற்ற அரசியல், சாதி அரசியல்தான் தகுதி என்றால் அது வைகோவிடம் இல்லை.
– சிறைக்கு அஞ்சிஓடும் சிறு நரித்தனம் தான் தகுதி என்றால், பொது வாழ்வில் ஐந்து ஆண்டு காலம் சிறையில் வாடிய தலைவர் வைகோவுக்கு இந்த தகுதி இல்லை.
24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்று இந்தியாவின் பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், சரண்சிங், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, வி்.பி்.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் அனைவரின் அன்பை பெற்றவர் மட்டுமில்லை, தமிழ் இனத்துக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் அவர்களிடம் வாதாடியவர் தலைவர் வைகோ. இது வரையில் தமிழ் நாட்டில் அந்த பெருமை வைகோவை தவிர வேறு யாருக்கும் இல்லை. யமுனைக் கரையில் தலை தாழா சிங்கமாக உலா வந்தவர் வைகோ.
தமிழ்நாட்டில் கலைஞர் ,ஜெயலலிதா இருவருக்கும் அடுத்து முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு உள்ளது என்று ஆனந்த விகடன் இதழ் கேள்வி எழுப்பியபோது பிரபல பத்திரிக்கையாளர் 90 வயது நிறைந்த குல்தீப் நய்யார் அவர்கள் சொன்னார், முதல்வர் ஆகும் எல்லாத் தகுதியும் வைகோவுக்குத்தான் இருக்கிறது என்று.
குல்தீப் நய்யார் பண்டித நேருவால் பாராட்டப்பட்டவர். 1962ல் சீனா படைஎடுத்த போது, பாகிஸ்தான் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு படை எடுத்து விடுமோ என்று கவலையடைந்தார் நேரு. அப்பொழுது பாகிஸ்தான் சென்ற பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், அந்நாட்டு அதிபர் யாகூப்கானை சந்தித்தார்.
பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா, 1948 இல் சொன்னார் ‘வேறு எந்த நாடாவது இந்தியா மீது தாக்குதல் நடத்த வருமானால் நாங்கள் இந்தியாவிற்கு பக்க பலமாக இருப்போம். எதிரிக்கு ஆதரவு தர மாட்டோம் என்று. இப்பொழுது சீனா இந்தியா மீது படை எடுத்து விட்டது. நீங்கள் ஜின்னா வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று குல்தீப் நய்யார் பாகிஸ்தான் அதிபரை கேட்டுக்கொண்டார்.
நேருவிடம் சொல்லுங்கள் நாங்கள் ஒரு போதும் இந்தியாவின் முதுகில் குத்த மாட்டோம் என்று பாக் அதிபர் திட்டவட்ட மாக கூறிவிட்டார். இந்த தகவல் நாளேடுகளில் வந்தது. டெல்லி திரும்பிய குல்தீப் நய்யாரை நேரில் அழைத்த பிரதமர் நேரு, கட்டி பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வடிய, குல்தீப்நய்யாருக்கு நன்றி கூறினார். நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். வெளிவுறவு அமைச்சரால் கூட சாதிக்க முடியாததை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார். அப்படிப்பட்ட தகுதி கொண்ட குல்தீப் நய்யார் அவர்கள் தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆகும் தகுதி வைகோவுக்குத்தான் இருக்கிறது என்று கூறியது, 2016இல் நிறைவேறப் போகிறது. தினமலரின் ஒப்பாரி எதுவும் தமிழ்நாட்டில் எடுபட போவது இல்லை, என்று சரமாரியாக சவுக்கடி கொடுத்துள்ளார்.
தினமலர் ஏடு எப்போதும் ஆட்சியாளுருக்கு சாதகமாக நடந்து கொள்ளும் என்பது அனைவரும் அறிந்த விசயமே. சமிப காலங்களில் தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து தொடர்ந்து பாடுபட்டு வரும் வைகோ அவர்களை மிக தரமற்று அவதூறு செய்திகளை பரப்பி வருகிறது. இதன் மூலம் வைகோவின் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியும் என்று ஆட்சியாளர்களின் யோசனையை நிறைவேற்ற முனைகிறது. இதன் மூலம் தினமலருக்குத் தான் அவதூறே ஒழிய வைகோவுக்கு அல்ல என்பதை முதலில் அவர்கள் உணர வேண்டும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment