தியாகத்தால் உருவான திராவிட இயக்க வரலாற்றினை இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்றுவித்து, இலட்சியத் தாகம் கொண்ட இளைய சமுதாயத்தை வார்ப்பிக்கும் தொடர் முயற்சிகளில் ஒரு அங்கமாக 2015 ஆகÞட் 8,9 தேதிகளில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஈரோட்டில் கருத்துப்பட்டறை நடைபெறும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இக்கருத்துப்பட்டறையில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், மறுமலர்ச்சி தி.மு.க. மாநில இளைஞர் அணி, மாணவர் அணித் துணைச் செயலாளர்கள், இரு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மன்றத்தில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர்.
அவ்வாறு தகுதியுடையவர்கள் ஈரோடு கருத்துப்பட்டறையில் பங்கேற்கத் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தேர்வு செய்திட ஆட்சிமன்றக்குழு செயலாளர் அ.கணேசமூர்த்தி, இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் ஆகியோர் கீழ்க்கண்டவாறு வருகை தருகின்றனர்.
01.08.2015 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்களின் வேளாண்மை பண்ணை வளாகம். பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி மாவட்டக் கழக அலுவலகம் கோயமுத்தூர். 02.08.2015 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை ஈரோடு மாவட்டக் கழக அலுவலகம் ஈரோடு. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நாமக்கல் மாவட்டக் கழக அலுவலகம், திருச்செங்கோடு, கரூர் மாவட்டக் கழக அலுவலகம், கரூர்.
இக்கருத்துப்பட்டறையில் சிறந்த பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள் பங்கேற்று பாடம் நடத்துகின்றனர். பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இரு நாட்களும் கலந்து கொள்வதுடன் நிறைவுரை ஆற்றுகிறார். பங்கேற்கும் அனைவருக்கும் வைகோ கையொப்பமிட்ட சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோரைத் தவிர எவரும் கருத்துப்பட்டறைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment