Sunday, July 26, 2015

காஞ்சிபுரம் மாவட்ட படப்பை பொது உறுப்பினர் கூட்டத்தில் வைகோ!

 
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பொது உறுப்பினர் கூட்டமானது படப்பை எஸ் கே எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்குமுன் தலைவரை வரவேற்க கழக முன்னணியினர் அனைவரும் ஏற்கனவே காத்திருந்தனர்.

பாலவாக்கம் சோமு, மதிமுக மகளிரணி செயலாளர், துணைபொதுசெயலாளர் மல்லை சத்யா, தமிழ் மறவன் மற்றும் கழக முன்னணியினர், தொண்டர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது தலைவரி ஆற்றிய சிறப்புரையில், வருகிற செப்டம்பர் மாதம் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற இருக்கிற பேரறிஞா் அண்ணா மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும் என தெண்டா்களுக்கு அழைப்பு விடுத்தார். 

பின்னர் விடுதலைப்புலிகளை பற்றியோ மாவீரா் திலகம் பிரபாகரன் பற்றியோ பேச கொளத்தூா் மணி, கோவை இராமகிருஷ்ணன், பழ.நெடுமாறன், என்னை தவிர வேற எவருக்கும் தகுதி கிடையாது என அதிரடியாக கூறினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment