தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.இராமலிங்கம் அவர்களின் தாயார் அன்னபூரணி அம்மாள் கடந்த 25.7.2015 அன்று இயற்கை எய்தினார். செய்தி அறிந்த மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (26.07.2015) இரவு நாமக்கல் மாவட்டம், காளிபட்டியில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அன்னாரது திருவுருப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, கே.பி.இராமலிங்கம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை து.கந்தன், திருப்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் முத்துரத்தினம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment