பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மதிமுக இணையதள அணியின் நல்லு ஆர் லிங்கம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு...
.
மதிமுக தலைமையகத்தை முற்றுகையிடுவோம் என்று பேசியதை பத்திரிகை.காம் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் "அப்படிப் பேசவே இல்லை" என்று மறுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவி திருமதி.தமிழிசை சௌந்திரராஜன். உங்களால் தாயகத்தின் நிழலைக்கூட நெருங்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.
.
ஆனால் அதே பேட்டியில் வைகோவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்றும், வைகோ எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
.
அமைச்சரவைப் பட்டியலைக் கொடுத்து உங்களுக்கு வேண்டிய துறையைத் தேர்ந்தெடுங்கள் என்று வாஜ்பாய் அவர்கள் கூறியபோது எனக்கு வேண்டாம் என் சகாக்களுக்கு மட்டும் கொடுங்கள் என்று மறுத்த மாமனிதர் அண்ணன் வைகோ அவர்கள்.
.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த போதும் மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சர் பதவி ஏற்க வாய்ப்பு வந்தபோதும் அதையெல்லாம் மறுத்து பதவி ஏற்பு நாளிலேயே உங்கள் மோடியின் முடிவுக்கு கருப்புக் கொடி காட்டியவர் எங்கள் அண்ணன் வைகோ அவர்கள்.
.
முல்லைப் பெரியாறு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, மதுவிலக்குப் போராட்டம் இப்படி மக்கள் நலன் சார்ந்த அனைத்திலும் கட்சி அடையாளத்தைத் துறந்து போராடுபவர் எங்கள் வைகோ.
.
இதையெல்லாம் மறைத்து, போலி விளம்பரம் மூலம் ஆட்சிக்கு வந்த பாஜகவின் தமிழிசை இப்படி ஒரு அபாண்டமான பொய்யை அள்ளி வீசி இருப்பதன்மூலம் வைகோ மீதான உங்கள் பயம் வெளியாகிவிட்டது.
.
அண்ணன் வைகோ மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
.
.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment