திருப்பூரில் பேரறிஞர் அண்ணா 107ஆவது பிறந்த நாள் விழா மாநாடு குறித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி - மாணவர் அணி - தொண்டர் அணி - மறுமலர்ச்சி மாணவர் மன்றம் ஆலோசனைக் கூட்டமானது, மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் இன்று 14.07.2015 திருப்பூரில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம் எஸ் விஸ்வநாதன் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கழக பொதுசெயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது, 22 ஆண்டுகளாக நாங்கள் எந்த வன்முறையிலும் இறங்கியதில்லை. அதற்காக எங்களை அடித்தால் சும்மா இருப்போம் என்று எவனும் நினைத்துவிடாதீர்கள்.
குடிச்சிட்டு எவனாவது நம்முடைய மாநாட்டுக்கு வந்தால் தூக்கி வெளியே எறியுங்கள்.
சில பேர் சொல்றாங்க எனக்கு பர்சனால்டி இருக்கிறது என்னை முதலமைச்சர் ஆக்கிடுங்கன்றாங்க. 10 நிமிடம் பிரபாகரனோடு பேசி போட்டா எடுத்துக் கொண்டு நான் தான் பிரபாகரனின் வாரிசு என்று சொல்லிக் கொள்பவன் இல்லை நான்.
10 ,12 எம் எல் ஏ ஆகலாம் என்ற நினைப்பில் இனி ஒருமுறை நம் நம்பக தன்மையை இழக்க நான் தயாரில்லை. பெரியார் பெயரையும் அண்ணா பெயரையும் உபபோகப்படுத்தும் தகுதியை இழந்து விட்டது திமுகவும் அதிமுகவும். அவர்களின் பெயர்களை உபபோகப்படுத்தும் தகுதி மதிமுகவுக்கு மட்டுமே உள்ளது.
நான் இந்துக்களை எதிர்க்கவில்லை. இந்துத்துவா என்ற நச்சுப் பாம்பை தான் எதிர்க்கிறேன். இந்திய அமைப்பு இன்னும் எவ்வளவு நாள் இருக்க போகிறது??? எனவும் கேள்வி எழுப்பினார்.
நான் யானை வேட்டைக்கு போகும் போது நரி ஊளை யிட்டால் பயப்படுவேனா??? வைகோ மீது அவ்வளவு எளிதாக கை வைக்க முடியாது என்றார் தலைவர் வைகோ.
மதிமுக சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு, செப்டம்பர் 15 அன்று பல்லடத்தில் (திருப்பூர்) நடைபெற உள்ளது. மாநாட்டு நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண முதலமைச்சர் ராமசாமி, தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன், திராவிட கழக திரு.வீரமணி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கலந்தய்வில், அ.கணேசமுர்த்தி, ஆர்.டிமாரியப்பன், இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன். மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மறுமலர்ச்சி மாணவர் மன்றம் அமைப்பாளர் ஆருயிர் சகோதர், இளைஞர்களின் எழிச்சி பேரொளி சசிகுமார், குமரி மாவட்ட இளைஞரணியின் தம்பி ஜெபர்சன் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர்கள். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment