Friday, July 24, 2015

7 தமிழர் விடுதலை கோரும் சிறப்புக் கூட்டத்தில் வைகோ பங்கேற்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை கோரும் சிறப்புக் கூட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசா தியேட்டர் அருகி உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வரும்போதே செய்தியாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். பின்னர் அவர்களுக்கு பதிலளித்துவிட்டு கூட்ட அரங்கிற்குள் நுளைந்தார்.

இக்கூட்டத்தில் தலைவர் வைகோ சிறப்புரையாற்றும்போது மதிமுக 7 தமிழர்களின் உயிரை காக்க ராம்ஜெத் மலானியை நீதிமன்றத்தில் வாதாட வைத்தது, வழக்கு மேல் முறையீடு அதிலும் தலைவர் மற்றும் சட்டதுறை செயலாளர் தேவதாஸ் வாதாடியது, இன்னும் 7 பேரையும் விடுதலை செய்வதற்காக போராடிக்கொண்டிருப்பது என மதிமுக செய்துவரும் பணிகளை பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார். 

இதில் திராவிட தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் பல அரசியல் தலைவர்கல பங்கேற்றனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment