மறுமலா்ச்சி மாணவா் மன்றத்தின் சாா்பிலே, பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கக்கூடிய திருவாலந்துறை கிராமத்திற்கு நீண்ட கால கோாிக்கையான பேருந்து வசதி செய்து தர கோாி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியாிடத்திலே மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை பெரும்பலூர் மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் துணை அமைப்பாளர் சகோதரர் தமிழருண் அவர்கள் ஆட்சியரிடத்தில் கையளித்தார்.
மனுவை படித்த ஆட்சியர் இம்மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் ஊா் மக்களை திரட்டி, குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியாிடத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறி கெடு விதித்துள்ளார் தமிழருண்.
இதனால் இம்மனுவில் கூறியிருக்கும் திருவாலந்துறை கிராம சாலை பிரச்சனையில் கூடுதல் கவனம் எடுத்து செயல்படுவாா்கள் என தொிகிறது.
இப்படிபட்ட துணிச்சலான முடிவை எடுத்திருக்கும் சகோதரர் தமிழருண் நோக்கம் நிறைவேறவும், கழகத்தின் சார்பில் இன்னும் வீரியமாக மக்களுக்காக போராடவும், மேலும் கழகத்தில் பல உயர் நிலைகளை அடையவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்திகொள்கிறோம்.
அவர் ஆட்சியரிடத்தில் கொடுத்திருக்கும் மனு மற்றும், மனுவை பெற்றதற்கான ரசீதும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது,
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment