சொர்க்கத்தில் முத்தெடுத்து, மேகத்தில் நூலெடுத்து, தலைவர் வைகோவின் புகழ் மாலை தாங்கி, கழகத்தின் கடைத்தொண்டனிடத்தும் அன்பு பாராட்டும், உடலின் ஒத்த உருவமாய், மனதில் ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தாலும், பொறுமையின் சிகரமாய், இணையதளத்திலே ஏவுகணையாய், கழகத்திற்கு என்னாளும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்ற, தலைவரின் இதயத்தில் நாளும் குடிகொண்டிருக்கின்ற, பாசமிகு சகோதரர், ஊர் தெரியாதவர் என்றாலும் சந்திப்போம் என கூறி ஓடி சென்று உறவு பாராட்டும், சென்னை வரும்போது வீட்டிற்கு வாருங்கள் உரிமையோடு அழைக்கும் உறவு பாலம், தமிழகத்தின் வாழ்வாதரத்தை காத்துக்கொண்டிருக்கின்ற தலைவர் பெயரை முதலாய் தாங்கி பிடித்திருக்கின்ற அன்பு சகோதரர் வைகோ கார்த்தி அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சகோதரர் கழகப்பணிகளில் சிறந்து விளங்குகிறார், மேலும் பல வெற்றிகளை கழகத்திற்கு பெற்றுகொடுத்து, கழகத்தின் மேல் நிலயை அடையவும், அயராது உழைத்து, நற்பெயர் சேர்க்கவும் வாழ்த்துகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment