Monday, July 6, 2015

வைகோவின்‬ ‪‎செயல்‬ ‪கண்டு‬ ‪மெய்சிலிர்த்தேன்‬ - ‎வைரமுத்து‬!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இன்று மதியம் 1.30 மணி அளவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஹலோ என்று சொல்வதற்கு முன்பாகவே, தற்போது தொலைக்காட்சி செய்தி பார்த்தேன், மெய்சிலிர்த்துப் போனேன். சட்ட ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் போராடுகிறீர்கள். சகதியையும், மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்திற்கே சென்று போராடுகிறீர்கள். 


பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைத்து, மக்களுடன் இணைந்து போராடுகிறீர்கள். தங்களுக்கு தமிழ் மண்ணும், தமிழ் சமூகமும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது என்று கூறி தனது மகிழ்ச்சியினைப் பகிர்ந்துகொண்டார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment