கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார்.அவருக்கு வயது 59.
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உண்ணாமலைகடை பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சசிபெருமாள் குற்றம்சாட்டியிருந்தார். பள்ளி,கோயில்களுக்கு அருகே அந்த மதுக்கடை இயங்கி வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது, கடையை அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காததால் தாமும், உண்ணாமலைகடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் செல்போன் டவரில் ஏறி போராடப்போவதாக சசிபெருமாள் அறிவித்தார்.
இதன்படி சுமார் 5 மணிநேரம் செல்போன் டவரில் ஏறி நின்ற அவரிடம் , மதுக்கடையை அகற்றுவது பற்றி 7 நாட்களுக்குள் முடிவு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப்பினும் போராட்டத்தை கைவிட மறுத்த சசிபெருமாளை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சசிபெருமாள் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment