Saturday, July 25, 2015

குடந்தை வடக்கு, தெற்கு ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

குடந்தை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய மறுமலர்ச்சி் தி மு க செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தனித்தனியாக ,சுவாமிமலை,தாராசுரம் ஆகிய இடங்களில் நடந்தது. குடந்தை வடக்கு ...ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.ஏ.அன்பு இருவரும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.


செந்திலதிபன் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய இக்கூட்டத்தில், கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்டச்செயலாளர் உதயகுமார், கழக விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன், மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊராட்சிகள் தோறும் கட்சியை பலப்படுத்துதல் ,வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு செய்தல் ,கழகக் கொடி ஏற்றுதல் ,திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் ஏராளமான தோழர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

குடந்தை வடக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் பேசியபோது, அண்ணன்
செந்திலதிபன் அவர்களை கட்சி மாநாட்டிலும், கழகப்பொதுக்குழுவிலும் தூரத்தில் நின்று பார்த்து இருக்கிறேன். அவர்கள் தஞ்சையில் நடந்த மாவட்ட கழக கூட்டத்திற்கு வந்த போது அவர் அருகில்சென்று உங்களை தொட்டுப்பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி கைபிடித்து குலுக்கினேன் என்றார். எனக்கு என்று எந்த ஒளிவட்டமும் இல்லை. தலைவர் வைகோ அவர்களின் உடன் பிறவா தம்பி என்பதால்தான் பல்லாயிரக்கணக்கான கழகத்தோழர்களின் அன்பை பெற்று இருக்கிறேன் என்று செந்திலதிபன் பதில் கூறினார்.

தாராசுரம் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, 1982ல் தாராசுரத்தில் நடைபெற்ற தி மு க மாநாட்டில் 5 பேர் மிதிவண்டியிலேயே வந்து கலந்து கொண்டதை நினைவுகூர்ந்து பேசினார் செந்திலதிபன். இந்தக் கூட்டங்களில் மிகத்தெளிவாக ஒன்றைக் கூறினேன், 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மறுலர்ச்சி் திமுக தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். தாயகத்தை நோக்கி அரசியல் தலைவர்கள் வரிசையாக அணிவகுப்பார்கள். தலைவர் வைகோ செல்ல வேண்டிய உயரத்திற்கு செல்வார்கள். இது நடந்தே தீரும் என்றும் செந்திலதிபன் தனது உரையில் கூறினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment