திருப்பூர் பார்க் சாலை, கே.எஸ்.ஆர் திருமணமண்டபத்தில் திருப்பூர் நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கூட்டமானது இன்று காலை 10 மணி அளவில் மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. திருப்பூர் மதிமுக மாவட்ட செயலாளர் R.T. மாரியப்பன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறூப்பினர் பொள்ளாச்சி மருத்துவர் சி.கிருட்டினன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அப்போது பேசிய அவைத்தலைவர் அவர்கள், 2016 மார்ச் மாதம் தான் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும்.அதுவரை பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என கூறினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி கிருஷ்ணன் அவர்கள்,
என்னைப் பொறுத்தவரை பொதுசெயலாளரை குருட்டுத் தனமாக பின்பற்றுபவன். அவர் நடந்து செல் என்றால் அந்த வழியில் குழி இருக்கிறதா, முள் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல் நடப்பவன் என கூறினார்.
இந்த திருப்பூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் அவர்கள், பெரியார் பெற்று தந்த இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து பட்டம் பெற்றவர்களும், பதவிக்கு வந்தவர்களும் தான் இன்று பெரியாரை விமர்சனம் செய்கிறார்கள் என விளக்கினார்.
இதில் ஏராளமான கழக கண்மணிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment