ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிகையாளர்களை மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் காலை 11 மணிக்கு சந்தித்தார்.
அப்போது 20 தமிழர் படுகொலைக்கு காரணமான சந்திரபாபு நாயுடுவுக்கு தலைவர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் தமிழக முதல்வரை இந்த விவகாரம் தொடர்பாக சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதி உள்ளதாகவும் ஆனால் இன்றுவரை எங்கள் குழுவுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த மாத முடிவுக்குள் தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் குழுவுக்கு நேரம் ஒதுக்காவிட்டால் நாங்கள் போட்டுள்ள தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எங்கள் குழு இறங்கும் என்று தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் சரவணன, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பொடா புதூர் பூமிநாதன், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அழகுசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment