இன்று தாயகத்தில் மறுமலர்ச்சி திமுக இணைய நண்பர்கள் சந்திப்பு இனிதே நடைபெற்றது. புதிய நண்பர்கள் பலரும் கலந்துகொண்டது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. இன்றைய சந்திப்பில் "அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் இணைய நண்பர்கள் பங்கு" குறித்து விவாதிக்கப்பட்டது.
கீழ்க்கண்ட கருத்துக்கள் விவாதத்தில் முன்வைக்கப்பட்டன...
1. மாநாட்டில் இணையதள நண்பர்கள் பெருமளவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொள்வது.
2. மாநாட்டு விளம்பரங்களை சிறப்பாக முன்னெடுப்பது.
3. இணையதளங்கள் (Websites) மற்றும் அலைபேசி செயலிகள் (Mobile App) மூலம் விளம்பரங்கள் செய்தல்.
4. சமூக வளைத்தளங்களில் (Social Media) விளம்பரங்கள் செய்தல்.
5. பண்பலை வானொலி (FM Radio) விளம்பரங்கள் மூலம் மாநாட்டு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
6. தொகுப்பு சிற்றஞ்சல் (Bulk SMS) மூலம் மாநாட்டு விளம்பரம் அனுப்புதல்.
7. "வைகோ" முகநூல் பக்கத்தை (The Vaiko Facebook Page) இன்னும் அதிக அளவில் இணையத்தைப் பார்வையிடுவோர் மத்தியில் கொண்டு சேர்த்தல்.
8. "பம்பரம்" சின்னத்தை அதிகம் பொது வெளியில் பரப்புதல்.
9. மாநாட்டில் சீருடை (T-shirt) அணிந்து பங்கேற்பது.
10. இணைய நண்பர்கள் அவரவர் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றுதல்.
மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து அனைத்து நண்பர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இறுதி செய்யப்படும் கருத்துக்களுக்கு நண்பர்கள் ஒத்துழைப்புடன் செயல்வடிவம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யலாம்.
சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்கள்:
1. செல்வத்துரை. த
2. ராஜா பிரபாகரன்
3. நாமக்கல் ஈஸ்வரன்
4. வ.சுரேஷ்
5. ரா.ராம்குமார்
6. பார்த்தசாரதி பாண்டு
7. கண்ணன் சாத்தூரப்பன்
8. விஷ்ணு ராகவன்
9. மூகாண்டி அருணாச்சலம்
10. மணிகண்டன்
11. நல்லு லிங்கம்
மற்றும் சில நண்பர்கள் கடைசிநேர மாறுதலாக நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் அடுத்த சந்திப்பில் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள்.
பி.கு: அவசரப்பணி நிமித்தமாக நண்பர் அருணாச்சலம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படம் எடுக்கும் முன்பாகக் கிளம்பிவிட்டார்கள்.
செய்தி சேகரிப்பு: நல்லு லிங்கம் முகநூல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment