டெல்லியில் இந்திய அரசியலை உலுக்கிக் கொண்டு இருக்கும் பிரச்சினையான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து, இந்திய நாடாளுமன்றம் நியமித்துள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழு, பொதுமக்கள் கருத்து அறியும் கூட்டம் இன்று (23.7.2015) புது தில்லியில் மேற்கு வங்க மாநில அரசு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
மாலை 5 மணி அளவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து 50 நிமிடங்கள் உரையாடினார்.
நேற்று (22.07.2015) மாலை 4.30 மணி அளவில் உடல் நலம் குன்றியிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஷ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மாலை 5.30 மணி அளவில் உடல் நலம் குன்றியிருக்கும் மத்திய நிதித்த்துறை முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
மாலை 6.30 மணி அளவில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் இல்லம் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
வைகோ அவர்கள் எப்போது டெல்லி சென்றாலும் உடன் பழகிய நண்பர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment