கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தியாகராய நகர், தணிகாசலம் சாலையில் உள்ள ராஜ் பேலசில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மதிமுக, மாா்க்கிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளதால், இந்த அமைப்புகள் பங்கேற்கும் கூட்டமைப்புக்கு " மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் " என்று பெயாிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் மதிமுக பொதுசெயலாளர், தலைவா் வைகோ, அண்ணன் திருமாவளவன், அய்யா இராமகிருஷ்ணன், அய்யா முத்தரசன் மற்றும் பல்வேறு இயக்க தலைவா்கள் ஒருங்கிணைப்பில் தொடங்கியது. இதில் தலைவர்கள் உரையாற்றினர்.
பின்னர் 4.30 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். இதில் வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று, மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகிற ஆகஸ்ட் மாதம் 13 தேதி 5 மாவட்டங்களில் கூட்டியக்கம் நடத்தப்படுமென, மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மனித நேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் சென்னையில் கூட்டாக அறிவித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment