மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புனித ரமலான் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில், சிறுபான்மை பிரிவு மாநிச் செயலாளர் முராத் புஹாரி தலைமையில் நடைபெற்றது,
புதுப்பேட்டை மாணவர்கள் தொழுகையுடன் நிகழ்வு ஆரம்பமானது. கழக பாடகர் அபுபக்கர் பாங்கு ஓதினார்.
இந்நிகழ்வில் தலைவர்
சிறப்புரையாற்றினார். தலைவர் பேசும் பொழுது மோடி அரசின் இந்துத்துவ சக்திகளைப் பற்றிப் பேசினார். மேலும் "எடுத்த முடிவுகளை நான் ஞாயப்படுத்தவில்லை. எனக்கு வேறு வழி இல்லை. வைகோ ரொம்ப நல்லவர்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் தேர்தல்னு வரும் போது ஜெயலலிதா பிடிக்கலையா கருணாநிதி, கருணாநிதி பிடிக்கலையா ஜெயலலிதா. இவர் ஜெயிக்க... மாட்டார் கட்சியைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள். நாங்களும் இரண்டு முறை தனித்து நின்றோம் " என்றார்.
மேலும் பேசும் பொழுது "என்னை இந்து மதத்திற்கு எதிரானவன் என்று சித்தரிக்கும் வேலை எடுபடாது. கோவில்களில் தேவாரம் ஒலிக்கட்டும், திருவாசகம் ஒலிக்கட்டும். தமிழ்ப்பாடல்கள் ஒலிக்கட்டும். முருகனை வழிபடுபவர்கள் வழிபடட்டும் " என்றார்.
இறுதியாக "இந்தக் கூட்டம் எனக்கு வந்த, எனக்காக வந்த கூட்டம் அல்ல.மண்ணடியில் இருந்தும், சென்னையின் பல பகுதியில் இருந்தும் வந்திருக்கின்றார்கள். இது முராத் புஹாரிக்காக வந்த கூட்டம்" என்று தலைவர் பெருந்தன்மையோடு
பேசினார்.
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment