இந்திய அறிவு வானில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கின்ற அய்யா அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள், மதுரை விமான நிலையத்தில் இன்று மாலை 6:30 மணியளவில் வந்தடைந்தார். வைகோ வருவதையறிந்த பத்திரிக்கையாளர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டனர். பின்னர் அவர்களுக்கு பேட்டியளித்தார். பிறகு இராமநாதபுரம் புறப்பட்டார்.
இன்று இரவு ரமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் அவர்களின் இல்லத்துக்குச் சென்ற வைகோ அவர்கள் அவரது அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர், பேரன் சேக் சலீம், அண்ணன் மகன் ஜெயினுல் அப்தீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கும் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போதும் அப்துல் கலாம் அவர்களின் புகழை எடுத்துரைத்தார் வைகோ.
வைகோவுடன் மாவட்டச் செயலாளர்கள் ராஜா. மு.பூமிநாதன், ப.சரவணன் மற்றும் கரத்தே பழனிச்சாமி, மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment