நேற்று இரவு ராமேஸ்வரம் கலாம் வீட்டிற்கு சென்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கலாம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, ரமேஸ்வரத்திலேயே தங்கியிருந்தார்.
இன்று காலை நடை பயிற்சி சென்றுவிட்டு வரும் வழியில், சந்திரசேகர் என்ற கூலித்தொழிலாளி வைகோ அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, தனது இல்லத்துக்கு வந்து தேநீர் அருந்த வேண்டும் என்றார். அவரது அன்பான கோரிக்கையை ஏற்று அவரது இல்லம் சென்று வைகோ தேநீர் அருந்தினார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தக்கொண்டார், அப்போது கராத்தே பழனிச்சாமி, மின்னல் முகமது அலி ஆகியோர் தலைவர் வைகோவுடன் உடன் இருந்தனர்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment