Sunday, July 5, 2015

அணை தூர்வாருவதை பார்வையிடுகிறார் வைகோ!

நாளை (06.07.2015) காலை 10.00 மணி அளவில் பல வருடங்களாக தூர்வாராமல் கிடந்த திருவைகுண்டம் அணையை தூர்வார தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு.ஜோயல் பசுமைத்தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசை உடனடி தூர்வாரவேண்டுமென்று பசுமைத்தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டது. தமிழக அரசானது அதை கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் காட்டியது.  இந்நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அணையை பார்வையிட்டு தமிழக அரசு தூர்வாரவில்லையென்றால் விவசாயிகளுடன் சேர்ந்து ஜூலை 6 ஆம் தேதி நான் தூர்வாருவேன் என செய்தியாளர்களிடம் அறிக்கை வெளியிட்டார். இதை அறிந்த தமிழக அரசானது உடனடி நடவடிக்கையாக பூஜை போட்டு தூர்வாரப்படும் என அறிவித்தது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கண்துடைப்புக்காக தமிழக அரசு தூர்வாராமல் பயன்தரும் வகையில் இருக்கவேண்டுமெனவும் தெரிவித்தார். இதை பார்வையிடுவதற்காகவே தூர்வாருவேன் அறிவித்த தினமான ஜூலை 6 ஆம் தியதி நாளை அணைக்கு சென்று பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பதை நேரில் பார்வையிடுகிறார் வைகோ.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment