மதுரை மாநகரில் அதிமுக அரசைக்கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் ஐயா வைகோ வருகைக்கு, மதுரை மாநகர் போருக்கு தயார் நிலையில் தொண்டர்கள் காத்திருந்தனர். தலைவர் ஐயா வைகோ மேடையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ முழங்கினார்.
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் படம் தங்கிய பதாகையை கையில் பிடித்து நாங்கள்தான் விடுதலைபுலிகள் என முழங்கினார்.
இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி துணை செயலாளர் அக்கா மல்லிகாதயாளன் கழக மகளிரணி நிர்வாகிகளோடு கலந்துகொண்டார்.
மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பளர் அருமை தம்பி நேதாஜி கார்த்திகேயன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அண்ணன் மதியழகன், மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தம்பி பூப்பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் சரவணன் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் புதூர் பூமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பாக ஏர்ப்பாடை செய்திருந்தனர்.
இதில் சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், மதிமுக இணையதள அணி சாம் சிசில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment