12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் மிகவும் பிற்பட்டோர் பிரிவில் மாநிலத்தில் முதலிடம் வகித்த ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமூகத்தை சார்ந்த நாமக்கல் சார்ந்த மாணவி செ.பிரியதர்ஷினியை பாராட்டி மறுமலர்ச்சி திமு கழக பொதுசெயலாளர் திரு.வைகோ அவர்கள் தங்க நாணயம் பரிசாக வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை இராஜகம்பள தொட்டிய நாயக்கர் அறகட்டளை ஏற்பாடு செய்து இருந்தது. விடுதலைகளம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், மதிமுக அரவாகுறிச்சி ஒன்றிய செயலாளர் கோ. கலையரசன், தான் தோன்றி மலை மதிமுக நகர செயலாளர் சத்திய மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவியை பாராட்டி திரு.வைகோ அவர்களின் துணைவியார் திருமதி ரேணுகாதேவி அம்மையார் அவர்களும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment