Saturday, January 30, 2016

சேலம் மாற்று அரசியல் விளக்க கூட்டம் பம்பரம் டிவியில் நேரலை!

மாற்று அரசியல் விளக்க பொதுக் கூட்டம் சேலம் மதிமுகவினர் ஏற்ப்பாட்டில் இன்று 30-01-2016 மாலை 7 மணி அளவில் நடைபெற்கிறது. இந்த நிகழ்ச்சியை பம்பரம் டியில் நேரலையாக ஒளிபரப்புகின்றனர். 

இதை காண www.pambaramtv.com என்ற வலைதளத்தை கிளிக் செய்வதன் மூலம் காணலாம். வீட்டிலிருந்தே கழகத்தின் நிகழ்ச்சிகளை காண உங்கள் பம்பரம் டிவியை கண்டு மகிழுங்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

குவைத் மதிமுக (வைகோ பாசறை) 6 ஆம் ஆண்டு தொடக்க விழா!


தமிழர் மறுமலர்ச்சி பேரவை நடத்திய குவைத் மறுமலர்ச்சி திமுக (வைகோ பாசறை) 6 ஆம் ஆண்டு தொடக்க விழா 29.01.2016. மிர்காப் நகரத்தில் மானுன் சால்வ உணவகத்தில் வீரத்தாய் வை.மாரியம்மாள் நினைவு அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதில் நம் கழகத்தின் கண்மணி கள் பலர் கலந்துக்கொண்டு வரும் தேர்தலில் மக்கள் நல கூட்டணி க்கு வெற்றி வாய்ப்புக்கு நம் அனைவரின் உழைப்பை கொஞ்சம் கடின படுத்த வேண்டும் என்று உரையாற்றினர்கள். நிகழ்சியில் பேரவை தோழர்கள் அதிகமாக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியில் தியாகி முத்துகுமார், விசிக பாக்கியராஜ் ஆகியோருக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். அவர்களின் பணி கழகத்திற்கு முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தவும், வருகிற தேர்தலுக்கு பயன்படுமாறும் செயல்பட ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் பாசிச வெறி பிடித்த காட்டாட்சி நடக்கிறது. அதன் விளைவாகத்தான் அனைவராலும் மதிக்கப்படும் அன்புச் சகோதரர் பழ.கருப்பையா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் வன்முறையின் மூலம் அச்சுறுத்தி மிரட்டுகின்ற காலித் தனத்தில் அண்ணா தி.மு.க. குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று நிலவி வரும் அரசாங்கத்தின் ஊழலைச் சுட்டிக் காட்டி உண்மைகளை எடுத்து வைத்ததால், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையா அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ஜனநாயக நெறி சார்ந்த முடிவெடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்தார்.

நேற்று நள்ளிரவில் ஆளும் கட்சி ரௌடிகள் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிட முயன்று, வீட்டுக்குள் இருந்த அவர்களை வெளியே வரச்சொல்லி கூச்சலிட்டவாறு வீட்டுக் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் மீது கற்களை எறிந்து உடைத்துள்ளனர். அவரது காரை உடைத்து நொறுக்கியுள்ளனர். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வசைபாடி மிரட்டிச் சென்றுள்ளனர்.

வேலூர் மாநகரில் அவர் தொடங்கி வைப்பதாக இருந்த தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவர் உயிரோடு திரும்ப முடியாது, கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதால் நிகழ்ச்சி இரத்துசெய்யப்பட்டது.

எனவே பழ.கருப்பையா அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை எதேச்சதிகாரம் தலைதூக்கி வருகிறது. பத்திரிகைகளை மிரட்டுவது, நியாயமான விமர்சனங்களுக்கும் அவதூறு வழக்கு போடுவது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

பழ.கருப்பையா என்ற ஒரு தனி மனிதர் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை எவர் மீதும் பாயும். ஜனநாயகம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரம், நடமாடும் உரிமை இவற்றுக்கெல்லாம் இந்த ஆட்சியில் பேராபத்து வளர்ந்து வருகிறது.

பழ.கருப்பையா அவர்கள் புகார் கொடுக்கவில்லை என்றாலும், இந்த வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களை காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து, உரிய முறையில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணா தி.மு.க.வினரின் வன்முறைச் செயலுக்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பழ கருப்பையா வீடு தாக்குதல்! மதிமுகவினர் நள்ளிரவே சந்தித்து ஆறுதல்!

சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார் பழ.கருப்பையா அவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட செய்தி ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.

இந்நிலையில் நேற்று 29-01-2016 இரவு 11.30 மணியளவில் ஆட்டோவில் வந்த ஐந்து நபர்கள் அவரது வீட்டில் இருந்த கார் கண்ணாடியை உடைத்து அவரை கொலை செய்யும் நோக்குடன் ஈடுபட்டிருக்கின்றனர். இதையறிந்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தகவல் அறிந்த மதிமுக தேர்தல் பணி குழு செயலாளர் கழக குமார், மற்றும் கழக நிர்வாகிகள், இரவு 12 மணிக்கு பழ. கருப்பையா அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக சார்பில் முத்துகுமார் புகழஞ்சலி கூட்டம். வைகோ திருமா சிறப்புரை!

இன்று 29.01.2016 சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் ஈகிகள்  முத்துக்குமார்  ஏழாமாண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு அனைவரும் ஒவொருவராக வந்திருந்த வேளையில்,  புயலென தலைவர் வைகோ வருகை புரிந்தார். அப்போதே அனைவரையும் நலம் விசாரித்தார் தலைவர்.

பின்னர் இளைய தலைமுறையினர் வைகோவுடன் கைகுலுக்கு மகிழ்நதனர். தலைவர் வைகோ அவர்களும் ஓவ்வொருவருக்காக கை கொடுத்து நலம் விசாரித்து மகிழ்ந்தார்.

இந்த நிகழ்வு ஈழத் தமிழருக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி தொடங்கியது. பின்னர் போராளிகளுக்கு அக வணக்கம் செலுத்தி ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைவர்கள் உரையாற்றுகையில், கட்டு விரியனை கட்டு வீரியன் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணாடி விரியனை கண்ணாடி விரியன் என்றுதான் சொல்ல முடியும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தி. 

தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்கிறான். அதை இளைஞர் கூட்டம் கவனித்து கொண்டிருக்கிறது. தமிழீழத்திற்கான எழுச்சியை தட்டி எழுப்ப வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க பேசினார் திருமுருகன் காந்தி.

இயக்குநர் கவுதமன், ஓவியர் வீர.சந்தானம்  வீரவணக்க உரையாற்றினார்கள். அப்போது தியாகி முத்துக்குமார் தந்தை-தங்கை மேடையில் அமர வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் பேசும்பொது, தேசியத் தலைவர் பிரபாகரன் நம்புகிற ஒரே தலைவர் அண்ணன் வைகோ மட்டுமே என புகழாரம் சூட்டினார். மேலும் மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

1987லிருந்தே ஈழத்தால் அண்ணன் வைகோ அவர்களை நேசித்து வந்தேன். இது புது உறவு அல்ல. நான் நினைத்தால் இருக்கைகளை பெற்றிருக்க முடியும்,ஆனால் அண்ணனுக்காக எல்லா கதவுகளையும் மூடி விட்டேன் எனவும் தெரிவித்தார். 

ஈழப் போராட்டத்தில் பாமக, திக, திரு.நெடுமாறன் அவர்களுடன் ஆரம்ப கட்டத்தில் இணைந்து போராடிய காலங்களை நினைவு கூர்ந்து பேசினார் திருமாவளவன். தான் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பாமக வஞ்சித்தது எனவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள், செம்மொழி மாநாட்டை பற்றி தவறாக சொன்னதால் பழ.கருப்பையாவை தாக்கியவர்கள் திமுக வினர். ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என்ற நாடகத்தில் பழ.கருப்பையா வை கூட ஆதரித்து அறிக்கை விடுவார் கருணாநிதி என கலைஞரின் கபட நாடகத்தை விளக்கினார். 

தலித் தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக நெருப்பில் குளித்தவர்கள் என அறிக்கை விடுத்தேன் எனவும் வைகோ கூறினார். 

ஈழப்போரில் அரை மணி நேரம் அண்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த கேடுகெட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி. 11 மணிக்கு போர் நின்றுவிட்டது என்று சொல்லி சூப் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தவர். இன்றைக்கு ஆள துடிக்கிறார். இந்த இனத்தை அழித்தது போதாதா?

ஜெனிவா கவுன்சிலில் தீர்மான நிறைவேற இந்தியாவுக்கு ஆதரவை தெரிவிக்க வலியுறுத்தாதது ஏன்? நாங்கள் இந்த மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறோம். ஏற்றத்தாழ்வில்லாத கூட்டணி அமைப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்வோம். மீனவர்களை காப்பாற்றி சிங்கள கொட்டத்தை அடக்குவோம்.

ஒரே தீர்வு சுதந்திர தமிழீழம் தான். மாற்று கருத்து கிடையாது. இளைஞர்களே திரண்டு வாருங்கள். பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று முதலில் பிரஸல்ஸில் கூறியவன் அடியேன் வைகோ. 

மலரட்டு தமிழீழம் என வைகோ பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி