இன்று 29.01.2016 சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் ஈகிகள் முத்துக்குமார் ஏழாமாண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அனைவரும் ஒவொருவராக வந்திருந்த வேளையில், புயலென தலைவர் வைகோ வருகை புரிந்தார். அப்போதே அனைவரையும் நலம் விசாரித்தார் தலைவர்.
பின்னர் இளைய தலைமுறையினர் வைகோவுடன் கைகுலுக்கு மகிழ்நதனர். தலைவர் வைகோ அவர்களும் ஓவ்வொருவருக்காக கை கொடுத்து நலம் விசாரித்து மகிழ்ந்தார்.
இந்த நிகழ்வு ஈழத் தமிழருக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி தொடங்கியது. பின்னர் போராளிகளுக்கு அக வணக்கம் செலுத்தி ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர்கள் உரையாற்றுகையில், கட்டு விரியனை கட்டு வீரியன் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணாடி விரியனை கண்ணாடி விரியன் என்றுதான் சொல்ல முடியும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தி.
தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்கிறான். அதை இளைஞர் கூட்டம் கவனித்து கொண்டிருக்கிறது. தமிழீழத்திற்கான எழுச்சியை தட்டி எழுப்ப வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க பேசினார் திருமுருகன் காந்தி.
இயக்குநர் கவுதமன், ஓவியர் வீர.சந்தானம் வீரவணக்க உரையாற்றினார்கள். அப்போது தியாகி முத்துக்குமார் தந்தை-தங்கை மேடையில் அமர வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.
மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் பேசும்பொது, தேசியத் தலைவர் பிரபாகரன் நம்புகிற ஒரே தலைவர் அண்ணன் வைகோ மட்டுமே என புகழாரம் சூட்டினார். மேலும் மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
1987லிருந்தே ஈழத்தால் அண்ணன் வைகோ அவர்களை நேசித்து வந்தேன். இது புது உறவு அல்ல. நான் நினைத்தால் இருக்கைகளை பெற்றிருக்க முடியும்,ஆனால் அண்ணனுக்காக எல்லா கதவுகளையும் மூடி விட்டேன் எனவும் தெரிவித்தார்.
ஈழப் போராட்டத்தில் பாமக, திக, திரு.நெடுமாறன் அவர்களுடன் ஆரம்ப கட்டத்தில் இணைந்து போராடிய காலங்களை நினைவு கூர்ந்து பேசினார் திருமாவளவன். தான் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பாமக வஞ்சித்தது எனவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள், செம்மொழி மாநாட்டை பற்றி தவறாக சொன்னதால் பழ.கருப்பையாவை தாக்கியவர்கள் திமுக வினர். ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என்ற நாடகத்தில் பழ.கருப்பையா வை கூட ஆதரித்து அறிக்கை விடுவார் கருணாநிதி என கலைஞரின் கபட நாடகத்தை விளக்கினார்.
தலித் தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக நெருப்பில் குளித்தவர்கள் என அறிக்கை விடுத்தேன் எனவும் வைகோ கூறினார்.
ஈழப்போரில் அரை மணி நேரம் அண்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த கேடுகெட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி. 11 மணிக்கு போர் நின்றுவிட்டது என்று சொல்லி சூப் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தவர். இன்றைக்கு ஆள துடிக்கிறார். இந்த இனத்தை அழித்தது போதாதா?
ஜெனிவா கவுன்சிலில் தீர்மான நிறைவேற இந்தியாவுக்கு ஆதரவை தெரிவிக்க வலியுறுத்தாதது ஏன்? நாங்கள் இந்த மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறோம். ஏற்றத்தாழ்வில்லாத கூட்டணி அமைப்போம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்வோம். மீனவர்களை காப்பாற்றி சிங்கள கொட்டத்தை அடக்குவோம்.
ஒரே தீர்வு சுதந்திர தமிழீழம் தான். மாற்று கருத்து கிடையாது. இளைஞர்களே திரண்டு வாருங்கள். பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று முதலில் பிரஸல்ஸில் கூறியவன் அடியேன் வைகோ.
No comments:
Post a Comment