ஜனவரி 26ம் தேதி மதுரை மாநகர் யானைமலை ஒத்தக்கடையில் நடைபெற உள்ள மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க மாநாட்டிற்கான இடத்தை மக்கள் நலநல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வைகோ 14.01.2016 இன்று காலை பார்வையிட்டார். மக்கள் நல கூட்டு இயக்க கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
அப்போது இந்த மக்கள் நலக் கூட்டணி மாநாட்டிற்கு இடமளித்த கருணை உள்ளம் ஒத்தக்கடை வவ்வால் தோட்டம் அண்ணன் சோலைராஜன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள்.
மேலும் யானைமலை ஒத்தக்கடையில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த யானைமலையை போல உறுதிகொண்ட நன்றிக்கடனாய் நாங்கள் இருப்போம் எனவும் மகிழச்சியோடு கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment