சிவகங்கையில் தமிழ் மொழி காக்க உயிர் துறந்த தமிழர்களின் நினைவாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டமானது 25.01.2016 திங்கள் மாலை நடந்தது. இதை சிவகங்கை மாவட்ட மாணவரணியினர் ஏற்ப்பாடு செய்து நடத்தினார்கள். கூட்டம் மாநாட்டில் திரளும் மக்களை போல திரண்டது பிரமிக்க வைத்தது.
இந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில்,இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருகே. சுப்பிரமணியன் முன்னிலையில் திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட R. S மங்களம் ஒன்றியம் திருப்பாலைகுடி ஊராட்சி, காந்தி நகர், பசும்பொன் நகர்,கீழக்கரை நகரை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் அக்கட்சியிலிருந்து விலகி மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் ம.தி.மு.க வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மக்கள் நலக் கூட்டணியின் செயல்வீரர்கள் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டணி ஒருபோதும் உடையாது என சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் உறுதியளித்தார்.
அழகுக்கு எல்லாம் வார்த்தைகளால் அழகு சூட்டிய புலவர் அரங்க.நெடுமாறன் அவர்கள், அண்ணன் வந்தியத்தேவன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
விருதுநகர் மாணவரணி அமைப்பாளர் ராஜபாளையம் மதியழகன் நன்றியுரை வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய மக்கள் தலைவர் வைகோ அவர்கள், கவிஞர் மீரா உலவிய மண்ணில் பேசுகிறேன் என சொல்லி தன் இடிமுழக்கத்தை தொடங்கினார்.
நாளைய யுத்தத்துக்கு வீரம் செறிந்த சிவகங்கையில் வாழ்த்து பெற்று செல்ல வீர வணக்க நாளில் வந்திருக்கிறேன். திமுக திராவிட கொள்கைகளை விட்டு கொடுத்தாலும், மதிமுக ஒருபோதும் விட்டு கொடுக்காது என்பதை உணர்த்தவே திருமண விழாவில் அரசியல் சட்டத்தை கொளுத்தியதை பற்றி உரையாற்றினேன். மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.
மதுரையில் அனைவரும் நாளை சந்திப்போம் எனவும் அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment