Friday, January 29, 2016

தியாகி முத்துகுமார் வீரவணக்க நாள் மரியாதை செலுத்திய வைகோ திருமா!

இன்று காலை 10 மணி அளவில் குளத்தூரில் தியாகி முத்துகுமாரின் 7 ஆவது ஆண்டு வீர வணக்க நிகழ்வு நடந்தது. இதில் வைகோ மற்றும் திருமா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் புகழேந்தி தங்கராஜ், இயக்குனர் கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோரும் கலந்துகொண்டு மலர் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள். 


ஈகை முத்துக்குமாருக்கு மதிமுக இணையதள அணி சார்பாகவும் இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் மற்றும் நண்பர்கள் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

பின்னர் வைகோ அவர்கள் முத்துகுமாரின் குடும்பத்தினருடன் உறவாடி ஆறுதல் தெரிவித்தார். அந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், முத்துக்குமார் எதிர்பார்த்த லட்சியம் நிறைவேறவில்லை. பொதுவாக்கெடுப்புக்கு மக்கள் சக்தி திரள வேண்டும் என கூறினார். 

இதில், நிரபராதி தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டி கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்து முதல் கையெழுத்தையும் பதிவு செய்தார். தொடர்ந்து திருமாவளவன் கையெழுத்திட்டார். 


தியாகி முத்துகுமார் சதுக்கத்தில் தமிழ் நாட்காட்டிகளை நண்பர்கள் கொடுக்க, தமிழின முதல்வர் வைகோ அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இதில் ஏராளமான பொதுமக்கள், மதிமுக இணையதள அணியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி
 

No comments:

Post a Comment