இவரது பெயர் ரெங்கசாமி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கன்னித்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர். வைகோ பொடா சிறைவாசத்தில் இருந்தபோது கடுமையான மன உலைச்சலில் இருந்தவர். சரிவர உணவருந்தாமல் இருந்த நிலையில் இவரது தாயார் இறந்த போதும் முகச்சவரம் செய்யவில்லை. பலர் வற்புறுத்தியும் வைகோ சிறைசாலையய் விட்டு வெளியேறியவுடன்தான் முகச்சவரம் செய்தார்.
வைகோ எங்கு வந்தாலும் முண்டியடித்து முன்னே செல்ல மாட்டார். பின்னால் நின்று கூட்டத்தோடு கூட்டமாக வைகோவை பார்த்து மகிழ்வார். வைகோவின் எந்த போராட்ட களமானாலும் முதல் ஆளாய் வந்து நிற்பார். இவரைபோன்ற தொண்டர்கள் உள்ளவரை "மதிமுக" என்ற கோட்டையை எந்த சக்திகளாலும் அசைக்க முடியும் என்ற எண்ணம் கூட நிறைவேறாது.
ஒருமுறையாவது தலைவர் வைகோவை சந்திக்க வைக்க வேண்டும் என பல முறை நண்பர்கள் முயற்ச்சி செய்தும் இவர் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் அந்த முயற்ச்சியை நண்பர்கள் கைவிடாமல், ஒரு நாள் அதை சாத்தியமாக்க காத்திருக்கிறார்கள். கழக வாஞ்சையுள்ள திரு.ரெங்கசாமி அவர்களுக்கும், வைகோ திரு.ரெங்கசாமி சந்திப்பை ஏற்ப்படுத்த துடிக்கும் நண்பர்களுக்கும் அவர்கள் ஆவல் நிறைவேற மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் ஓமன் மதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment