மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் மாணவரணி செயலாளராக இருந்த அன்பிற்குரிய அண்ணன் திமு.ராஜேந்திரன் அவர்கள் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றபின், அந்த பொறுப்பிற்கு, ஏற்கனவே மாணவரணி துணை மாநில செயலாளராக இருக்கும், பல மாணவ போராட்டங்களை முன்னெடுத்து, மாணவர்களை ஒருங்கிணைத்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அண்ணன் மணவை தமிழ் மாணிக்கம் அவர்களை மதிமுக மாநில மாணவரணி செயலாளராக அறிவிக்கப்பட்டிருப்பதாக, மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்களின் கழக பணி மேலும் சிறப்பாக இருக்கவும், மாணவ பட்டாளங்களை ஆரோக்கியமான அரசியலுக்கு கொண்டுவரவும் முக்கியதுவம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment