திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அடங்கிய, திருச்சி மண்டல செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மணச்சநல்லூரில் வைத்து 03.01.2016 இன்று நடைபெற்றது.
இதில் 15 க்கு மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.கவிலிருந்து விலகி த்மிழின முதல்வர் வைகோ தலைமையில் தங்களை ம.தி.மு.க வில் இணைத்துக் கொண்டார்கள்.
கனிம வளம் சுற்றுச்சூழல் நலச்சங்கம் பொருளாளர் ப.சுப்பிரமணியன் அவர்கள் மக்கள் தலைவர் வைகோ தலைமையில் தங்களை ம.தி.மு.க வில் இணைத்துக் கொண்டார்.
மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் உறயாற்றினார்கள். மேலும் செந்திலதிபன், மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோரும் கழக முன்னணி நிர்வாகிகளும் உரயாற்றினார்கள்.
தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய வைகோவர்கள் நேற்று காலமான ஏபி பரதன் அவர்களோடு கடந்த சந்திப்பின்போது நடந்த உரையாடல்களை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்தார்.
மேலும் சென்னை வழியாக டெல்லி சென்று ஏபி பரதன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.
No comments:
Post a Comment