நாகர்கோவில் நகர மதிமுக சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்கும் போக்குவரத்து துறையை கண்டித்தும், பழுதான சாலைகளை செப்பனிடாத நகராட்சியை கண்டித்து 8-1-2016 அன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் நல கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல், நாகர்கோயில் நகர செயலாளர் ஹெக்டர் ஜெரால்டு மற்றும் கழக நிர்வாகள், மகளிர், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சாலைகளை செப்பனிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் மதிமுக நிர்வாகிகள் கையளித்தனர்.
ஒமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment