இன்று 6-1-2016 நடைபெற்ற மதுரை மண்டல
மதிமுகவிலுள்ள மதுரை மாநகர், வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,
தேனி, திண்டுக்கல், மாவட்டங்களுக்கான கலந்தாய்வு செயல் வீரர்கள் கூட்டமானது, மதுரை விரகனூர் மகாராஜா மண்டபத்தில்
காலை 10 மணி அளவிலே தொடங்கி நடந்தது.
இந்த
கூட்டத்திற்கு வரவேற்கும் விதமாக மதுரை முழுதும் சாலைகளில் கழக கொடிகளும்,
பேனர்கள் உட்பட தோரணங்களாக காட்சியளித்தன.
புதிய இளைஞர்கள் தலைவர்
வைகோ அவர்கள் முனிலையில் மதிமுகவில் இணைந்தார்கள்.
இதுவரை இல்லாத அளவிற்கு, எண்ணிப்பார்க்க முடியாத கூட்டத்தைக் கண்டு, தலைவர் வைகோ
அவர்கள், இந்த கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, சிறிது நேரம் எழிர்ச்சி உரையாற்றினார். அதிலிருந்தே தொண்டர்கள்
மிகுந்த உற்சாகத்தோடு மாலை வரை இருந்தனர்.
மாலை தலைவருடைய
சிறப்பு பேரையை கண்டுகளிக்க ஆவலோடு இருந்த தொண்டர்கள் மேலும் மகிழ்ச்சியுறும் விதமாக,
தலைவர் பேருரையாற்றீனார்.
அப்போது
பேசிய தலைவர், நாம் கொள்கைகளை சமரசம் செய்வில்லை, அண்ணாவின் லட்சியங்களை
காவுகொடுக்காவில்லை, மற்ற திராவிட கட்சிகள் அனைத்தையும் நாசமாக்கிவிட்டன.
திமுக
நம்முடன் நல்லுறவை பேணி அழிக்க பார்த்தது. அதை நான் சந்தேகப்பட்டது இப்போது சரியாகி
போய்விட்டது. நாம் மாவட்ட செயலாளர்களுடன் பாசமாகதானே இருந்தேன். போனவர்களை பற்றி
நீங்கள் கவலைபடாமல் முன்னை விடவும் இப்போது எழுச்சியாக இருக்கிறீர்கள் என்பதே நெல்லை
செயல்வீரகள் கூட்டத்தின் வாயிலாக நமது இயக்கம் வலுப்பெறுகிறது என்பது சான்றாகியது.
மக்கள் நலக் கூட்டணி திடீரென்று முடிவாகிவிடவில்லை.
மாதங்கள் கலந்துரையாடி பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளித்து பின்னர், தாயகத்தில்
கூட்டணியில் உள்ள கட்சிகளின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அனைத்து தமிழக
திட்டங்களையும் உருவாக்கி குறந்த செயல்பட்ச செயல் திட்டமாக உருவாக்கி மக்கள் நலக் கூட்டியக்கமாக
முடிவெடுத்து அறிவித்தோம். மேலும் குறந்த பட்ச விளக்க அறிக்கையை வெளியிட்டு, எந்த
கட்சிகளை கூட்டியக்கத்தில் இணைக்கமாட்டோம் என்று தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டு
வருகிறோம்.
இரண்டு ஆட்சிகளிலும் அனைத்து திட்டங்களிலும்
போட்டி போட்டு ஊழல் செய்தார்கள். ஆனால் மதிமுக 8 ஆண்டுகள் தென்னக மக்களை பாதுகாக்க
அவர்களை வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடி இருக்கிறது. 13 சாலைகளை ஒரே நேரத்தில்
மறித்த ஒரே கட்சி நமது கட்சியை தவிர வேற யாருமில்லை.
வைகோ தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்காக எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கிறார். மேலும் ஜோதிபாசு வைகோவின் மிக நெருங்கிய
நண்பர் என கேரள முந்நாள் முதல்வர் அச்சுனாதனந்தன் அவர்கள் ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார்
என கூறினார்.
மாற்றம் விரும்பும் தமிழக மக்கள் 65% பேர், மக்கள்
நலக் கூட்டணியை ஆதரிக்கிறார்கள். திராவிட இயக்க கொள்கையுடைய இயக்கமாக, திராவிட
இயக்க மாண்புடைய கட்சியாக மதிமுக இருக்கிறது.
வருகிற 26 ஆம் தேதி கூட்டமாக வாருங்கள், கூட்டணியில்
இருக்கும் ஒவ்வொரு ஆளும் ஆயிரம் பேருக்கு சமம். மக்களை திரடிக்கொண்டு வாருங்கள்.
நம்முடைய் வீட்டி மாதரசிகளை அழைத்து வாருங்கள். அவர்கள்தானே தமிழகத்தை
தீர்மானிக்கிறார்கள்.
இந்த தேர்தலில் பணம் கொடுக்கும் கட்சிகளிடம்
பணம் வாங்கிவிட்டு மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டு போடுவார்கள். ஜனவரி 26 ஆம் தேதி மதுரையில்
நடக்கிற மக்கள் நலக் கூட்டணி பொதுக்கூட்டம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை
ஏற்ப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு வாருங்கள் என பேசினார் வைகோ.
மக்கள் நலக் கூட்டணி கட்சிகளிடம் இருக்கும் நேர்மை, திமுக.,அதிமுக. இருகட்சிக்குமே கிடையாது.
நாம் இன்னும் வேகமாக பணியாற்றுவோம். 2016 ல் வெற்றிபெறுவோம்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment