அதிகாலையிலேயே சூரியன் உதிக்குமுன்னே எழும்பி, குளித்து கோலமிட்டு, பானையில் வண்ணம் தீட்டி, முக்கோணவடிவில் செங்கல் வைத்து அதன் மேல் வண்ணம் தீட்டிய பானையை வைத்து, கரும்புகளை ஒன்றோடொன்று பொங்கல் பானையின் அருகில் வைத்து, பானையிலே பொங்கலிட்டு அதை இனிப்பு செய்து ஒருவருக்கொருவர் பரிமாறி அன்பு பாராட்டி, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறோம்.
அனைவரும் மகிழ்ச்சியுடனும், குடும்பம் தழைக்க ஒற்றுமையுடனும் பொங்கலி கொண்டாடி மகிழவும், வருகிற உழவர் திருநாளில் வீட்டு விலங்குகளை சுத்தம் செய்து வர்ணமிட்டு அழகு படுத்தி, அவைகள் நமக்கு செய்த உதவிகளுக்காக அவற்றை போற்றி கொண்டாடுவோம்.
வீட்டு விலங்குகளுடன் அன்றாட நம் வாழ்க்கை கலந்ததையொட்டி அவற்றை போற்றி புகழும் தினத்தை உழவர் திருநாளை கொண்டாடி மகிழ பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துதலை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment