மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 4 நான்கு கட்சிகளும் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார்கள். மேலும் குறைந்தபட்ச செயல் திட்ட வரைவு அறிக்கையையும் வெளியிட்டனர்.
இதை முன்னிட்டு குறந்த பட்ச செயல் திட்ட வரைவு அறிக்கையை விளக்கும் பொருட்டு மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் மாநாடு இன்று 26-01-2016 மாலை 5.30 அளவில் நான்கு வழி சாலை, ஒத்த கடை, மதுரையில் நடக்கிறது.
இதில் மக்கள் நலக் கூட்டணியின் தேசிய தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். பின்னர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான, வைகோ, முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோரும் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டு நிகழ்வுகள் தொடக்கம் முதல் இறுதி வரை பம்பரம் டிவியில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
ஒளிபரப்பு மாலை 5.30 மணி அளவில் தொடங்கும். இதை www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கி உங்கள் இல்லங்களில் இருந்தே மாநாட்டை கண்டுகளிக்கலாம்.
காணதவறாதீர்கள் மாலை 5.30 மணிக்கு தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்த பம்பரம் இணையதள தொலைக்காட்சி குழுவினருக்கு நெஞ்சார்ந்த பராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி.
No comments:
Post a Comment