ஓமன் மதிமுக இணையதள அணியின் சார்பில் அன்பு சகோதரர்கள், கணேஷ் ராஜேந்திரா, விஸ்வநாதன் ஆகியோர் இன்று 21-01-2016 காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சென்னை, அண்ணாநகர் வீட்டில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து ஓமன் வாழ் தமிழர்கள் சார்பாக, ஓமன் மஸ்கட்டிலிருந்து, இந்தியா மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவை வேண்டி வலியுறுத்தி பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணங்களை தலைவர் வைகோவிடம் கொடுத்து விளக்கினார்கள்.
அப்போது தலைவர் வைகோ அவர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த போது இந்த கோரிக்கையை முன்னிறுத்தியதாகவும், அப்போது கார்கோ வசதியை மட்டுமே இந்திய அரசு ஏற்ப்படுத்தி தந்ததாகவும், பின்னால் வந்த அரசுகள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு விமான சேவை வேண்டி வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
வருகிற 2016 தேர்தல் நிதியாக சகோதரர் விஸ்வநாதன் அவர்கள் ₹3000 - தை தலைவர் வைகோவிடம் கையளித்தார். அதை வைகோ அவர்கள் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். தலைவருடனான இந்த உரையாடல், சந்தித்த சகோதரர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, ஓமன் மதிமுகவும் ஆனந்தத்தில் திளைக்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணியை முன்னிறுத்தி உரையாடியதற்காகவும், தேர்தல் நிதியை தலைவர் வைகோவிடம் கையளித்து தொடங்கி வைத்ததற்காகவும், சகோதரர்கள் விஸ்வநாதன், கணேஷ் ராஜேந்திரா ஆகியோருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment