தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி அரசால் 2011 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதில் இருந்து அப்போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தமிழர்களின் பண்பாட்டுடன் ஒன்றிணைந்து மரபுவழி வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வேறெந்த தடைகளும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகள் செய்வதுடன், போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வழங்கி சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment