30.01.2016 இன்று மாலை சேலம்-பாஸ் மைதானத்தில் "மாற்று அரசியல்" விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்ற மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஆனந்த ராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
இதில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். தலைவர் வருகை தந்ததும், தப்பாட்ட கலைஞர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார் வைகோ. மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், நம்பிக்கை நட்சத்திரங்களான இளைய பட்டாளங்கள் தலைவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். சேலம் மாநகரம் என்றுமே ம.தி.மு.க. வின் கோட்டைதான் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த கூட்டத்திற்கு எராளமானோர் கலந்துகொண்டனர்.
தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார். கழக முன்னோடிகளும் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியை பம்பரம் டிவி ஒருங்கிணைப்பு குழுவினர் பம்பரம் டிவி வாயிலாக நேரலை செய்தனர். இதை உலக தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கண்டுகளித்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment