மத்திய அரசு ஜல்லிகட்டை நடத்த அனுமதியளித்ததையடுத்து உச்சநீதிமன்றம் தடைவிதித்து ஜல்லிகட்டு நடக்கவிடாமல் தடுத்தது. இதனால் தமிழக மக்கள் பொங்கல் தினங்களில் ஜல்லிகட்டு நடத்த முடியாமல் மனதளவில் பொங்கலை மகிழ்ச்சிகரமாக கொண்டாட முடியாத சூழல் உருவானது.
இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக மதுரை மாநகரில் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்களின் தலைமையில் "ஜல்லிக்கட்டு நடத்த தடையை நீக்க கோரியும், அவசரச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும்" உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தப்பட்டது. இத்ல் ம.ந.கூட்டணி தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் மதுரையே குலுங்கும் அளவிற்கு கூட்டம் இருந்தது.
ஜல்லிக்கட்டு தடை நீக்க நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் "மக்கள் நல கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் தலைவர் ஐயா வைகோ அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய மாநில அரசுகளே காரணம் என குற்றம் சாட்டியதோடு பீட்டா அமைப்பிற்கு கண்டனமும் தெரிவித்தார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் "தியாகவேங்கை" அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் திருமாவளவன் வாழ்த்துரை வழங்கினார்.
மதுரை மகாத்மா பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி செல்வி சுவேதா, மதுரையில் ஜல்லிக்கட்டுதடை நீக்க வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கெடுத்த, தலைமுறை காக்கும் தலைவர் வைகோ அவர்களுக்கு வாழ்த்து சொன்னபோது கூட்டமே பரவசமானது.
இறுதியாக வைகோ அவர்கள் ஜல்லிகட்டு தடைக்கு அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்க வேண்டும் என்று சொல்லி முழங்கினார்.
இறுதியாக கூட்டம நடந்து முடிந்த பின்னர் இந்த மதுரை "உண்ணாவிரத போராட்டத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார், தோழர் முத்தரசன் அவர்கள். அதை தலைவர் வைகோ அவர்கள் பெற்று பருகினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment