கழக கண்மணிகளே!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவரணியில் இருக்கும் அன்பு சகோதரர் சே.பிரபாகரன் அவர்கள், திருச்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளராக இருக்கும், சேனை பொன் ஜானகிராமன் அவர்களை சந்திக்கும் வய்ப்பை பெற்று அவரது இல்லத்திற்கு சென்றிருக்கிறார்.
அவர் வீட்டின் உள் நுழைந்தவுடன் திரும்பும் இடம் எல்லாம் தாயகத் தலைவன் வைகோ படங்கள்தான் தென்பட்டிருக்கின்றன. பயன்படுத்தும் பொருட்கள் (இருக்கை, பிளாஸ்க், காலண்டர், வாகனம் மேலும் பல...) அனைத்திலுமே வைகோ படம் பதியப்பட்டிருக்கின்றன. அவர் பிரபாகரனிடம் பேசிகொண்டே இருந்தபோது திடீர் என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் சிறு குழந்தை போல.
தன் உடல் நிலையை நினைத்து அவர் அழவில்லை. தமிழகத்தை காக்கும் தலைவன் வைகோவை நினைத்துதான் அழுதிருக்கிறார். அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார் தலைவர் மீது நான் வைத்துள்ளது பக்தியா பாசமா என்று எனக்கே தெரியவில்லை. 10-1-2016 திருச்சியில் நடைபெற்ற. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். தலைவரை பார்க்க ஆனால் பார்க்க முடியவில்லை என்று சொல்லி மறுபடியும் கண்ணீர் விட்டிருக்கிறார்.
கடைசியாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு மேலும் கண்ணீர் விட்டிருக்கிறார். என்னவென்றால், நான் (சேனை பொன் ஜானகிராமன்) வேண்டுகிற தெய்வம் என் தலைவனை முதல்வர் நாற்காலில் உட்கார வைக்கணும். இது நடந்தவுடன் நான் இறந்திடனும். என் ஆசை எல்லாம் இதுமட்டும்தான்.
அவருக்கு தலைவரை பற்றி பேசும்போதே கண்ணீர் அவர் விழிகளில் வழிந்த வண்ணமாகவே இருந்திருக்கிறது.
அப்படிபட்ட கழக பாதுகாப்பாளன், பெரு மதிப்பிற்குரிய அண்ணன் சேனை.பொன்.ஜானகிராமன் போல் ஊருக்கு ஒரு கழக தொண்டர்கள் இருந்தால் அண்ணாவின் கொள்கைகளை த்மிழின காவலர் வைகோ வென்றெடுப்பார் என்ற ஐயப்பாடு இருக்க முடியாது.
அண்ணனின் கனவான முதல்வர் வைகோ என்ற நாள் வரும் தேர்தலில் சாத்தியமாக ஒவ்வொரு கழகத்தினரும் தன்னலம் பாராமல் பொதுநலம் பேணி உழைப்போம். வரும் காலத்தினை வைகோவின் காலமாக மாற்றுவோம்.
மக்கள் நலக் கூட்டணி தலைமையில் கூட்டாட்சியை மலர வைப்போம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment