சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார் பழ.கருப்பையா அவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட செய்தி ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.
இந்நிலையில் நேற்று 29-01-2016 இரவு 11.30 மணியளவில் ஆட்டோவில் வந்த ஐந்து நபர்கள் அவரது வீட்டில் இருந்த கார் கண்ணாடியை உடைத்து அவரை கொலை செய்யும் நோக்குடன் ஈடுபட்டிருக்கின்றனர். இதையறிந்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
தகவல் அறிந்த மதிமுக தேர்தல் பணி குழு செயலாளர் கழக குமார், மற்றும் கழக நிர்வாகிகள், இரவு 12 மணிக்கு பழ. கருப்பையா அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்தார்.
No comments:
Post a Comment