Thursday, January 7, 2016

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்ட விழுபுரம் மண்டல செயல்விரர்கள் கூட்டம்!

இன்று 07.01.2017 காலை 10 மணி அளவில் விழுப்புரம் மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார்கள்.

காலை வேளையில் நிகழ்ச்சி தொடங்கும் முன், உழுந்தூர்பேட்டையில் கழக கொடியை ஏற்றி வைத்தார் தலைவர் வைகோ அவர்கள்.


அந்த செஞ்சி நிகழ்ச்சியில், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடேஷன் அவர்கள் பொது செயலாளருக்கு பன்ருட்டி முந்திரி பருப்பு வழங்கினார்கள். பின்னர் தொண்டர்களை தலைவருக்கு அறிமுக செய்து வைத்தார். 

ஜெயராமன் கடலூர் மாவட்டம் மங்களூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தன்னம்பிக்கையின் உதயம் சிறுவணிகம் என்கிற பெயரில் ஒரு பெட்டி கடை நடத்தி வருகிறார்.இவர் தனது ஓய்வூதியத்திலிருந்து மாதம்  100 ரூபாய் வீதம் மற்றும் பொது மக்களிடம் தேர்தல் நிதியாக வசூலித்த தொகை யினை வழங்கினார். இவர் அவ்வப்போது தன்னாலான இயன்ற நிதியை தலைவர் வைகோ அவர்களிடத்தில் கையளித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் மயிலம் வடக்கு ஓன்றிய பொறுப்பாளர் டீக்கடை வெங்கடேசன் தனது டீக்கடையில் வைத்திருந்த உண்டியல் மூலம் வசூலான பணத்தை மக்கள் தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கினார்கள்.

இப்படி ஒவ்வொரு தொண்டனும் கழகத்தின் மேல் வாஞ்சையாய் இருபதே எதிரிகளுக்கு கலக்கத்தையும் ஏற்ப்படுத்துகிறது.

உளுந்தூர்பேட்டை பேருராட்சி பெருந்தலைவரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.ஜெயசங்கர் அவர்கள் பிரச்சார வாகனத்தை மக்கள் தலைவர் மாமனிதர் வைகோ அவர்கள் வாகனத்தில் ஏற் தொடங்கி வைத்தார்.

கழக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். தலைவர் வைகோ அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தினார்கள். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment