கொங்கு மண்டல அளவிலான மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று 5-1-2015 திருப்பூரில் நடக்கிறது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நடக்கிறது.
இதில் திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.ஆர.டி.எம. வரவேற்புரையாற்றினார்கள். கோவை மாவட்டம் கிணத்துகடவு சொக்கனூர் ஒன்றியத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும்,திமுகவின் ஒன்றிய விவசாய அணி செயலாளர் திமுகவில் இருந்து விலகி தலைவர் வைகோ அவர்களின் முன்னிலையில் இணைந்ததையொட்டி அவர் உரையாற்றினார். அப்போது அவர் மதிமுக தான் உண்மையான தாயகம் எனவே நான் என்னை இக் கழகத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இடையிடையே நிர்வாகிகள் உரையாற்றிக்கொண்டிருகிறார்கள். தலைவரும் இணையத்தை பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது நாமக்கல் நந்தகுமார் அவர்கள் பொதுசெயலாளரிடம் நாள் காட்டி கொடுது வாழ்த்து பெற்றார்.
துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசும்போது, நாஞ்சில் மண்ணில் பிறந்து
நெஞ்சில் நஞ்சை சுமக்கும் மணக்காவிளையில் பிறந்து இன்று மனநோயாளியாக திரிகிறார்கள் என ஆவேசமாக பேசினார்.
திருப்பூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோவிந்தராஜ் இரா.சு.கோ மதிமுக திருப்பூர் அவர்கள் தயார் செய்த கொள்கை விளக்க புத்தகத்தை தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள்.
மேலும் முன்னணி தலைவர்களும், கழக நிர்வாகிகளும் உரையாற்றினார்கள். நிறைவாக தலைவர் வைகோ அவர்கள் சிறப்பு பேருரையாற்றுவார்.
No comments:
Post a Comment