புத்தாண்டு தினமான இன்று 01.01.2016 மாலை 4 மணியளவில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களை சந்தித்தனர். புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறும் அழைப்பு விடுத்தனர். இதில் மதிமுக மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் முன்னணி நிர்வாகிகளும், தமாகா முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
மக்கள் நலக் கூட்டணி வலுவடைந்து வருகிறது. மக்கள் மனதில் மக்கள் நலன் காக்கிற கூட்டணியாகவே மக்களுக்காக பணியாற்றி வருகிறது. மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னலம் பாராமல் பொது நலத்திற்காக உழைக்கும் மக்கள் நலக் கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதே மக்களின் பேராதரவை வைத்து சொல்லலாம்.
No comments:
Post a Comment