மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் மாநாடு ஒத்தகடை மதுரையில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்ப்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பொடா புதூர் பூமிநாதன் செய்தார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்.
அந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்ப்பாட்டை பந்தல்கள், இருக்கைகள், பொதுமக்களுக்கான வசதிகள் அனைத்தையும் நேற்று இரவு சிவகங்கையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்கத்தை செலுத்தி விட்டு மதுரை வந்து இரவே பார்வையிட்டார் வைகோ.
மேலும் காலையிலே இன்னும் திடலுக்கு வந்து பணிகளை சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என பார்வையிட்டார். மாலையில் மாநாடாக இருந்தாலும் மக்கள் கூட்டமாக வருவதால் அனைத்து பாதுகாப்பும் இருக்கிறதா என பார்வையிட்டார் வைகோ.
இப்படி அனைத்து விசயங்களுக்கும் முன்னெச்சரிக்கையில் கவனமாக இருக்கும் வைகோவின் தலமையினால் ஆன மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.
ஊழல் இல்லாத, பாதுகாப்பான, அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கொடுக்கும், மதுவில்லா தமிழகம் அமைக்க மக்கள் நலக் கூட்டணியை ஆதரியுங்கள். வருகிற 2016 மே மாதம் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய, அதன் முன்னோட்டமாக இன்றைய மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கத்தை இந்த மாநாட்டிலே கலந்துகொள்ளுங்கள். அரசியலை புரிந்துகொள்ளுங்கள். உணமையானவர்களை இனம் காணுங்கள். வெற்றி மக்கள் நலக் கூட்டணிக்கே என்று உறுதிப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment