கரூர் மாவட்டம்
அரவகுறிச்சி மதிமுக ஒன்றியத்தின் சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று 31-01-2016 மாலை 5 மணி அளவில் சங்கமம்
மஹாலில் நடந்தது. இதில் மதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
சிறப்புரையாற்றிய
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசியபோது, பிள்ளைகளை திட்டாதீர்கள். மார்க் குறைந்தால்
குழந்தைகள் கவலை பட வேண்டாம். தைரிய உணர்வுகள் குறந்துவிட்டது. அவர்களை ஊக்குவிக்க
வேண்டும் என பெற்றோர்களுக்கு வேன்டுகோள் வைத்தார்.
பிள்ளைகள் கேட்பதையெல்லாம்
பெற்றோர்கள் வாங்கி கொடுக்காதீர்கள். இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்கள் தங்கள் பெற்றோர்களுடன்
வாழ்வதில்லை.
புத்தக சுமையை
சுமக்கிற பிள்ளைகள் விளையாட வேண்டும், ஓடி விளையாடு பாப்பா என பரதி பாடலை சொல்லி விளக்கினார்.
பிள்ளைகளுக்கு இப்போது அரசியல் வேண்டாம். அரசியலை கவனியுங்கள். புத்தகங்களை படியுங்கள்.
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
பிள்ளைகள் உடல்
நலன் குறைவு என தெரிந்தால் உடனே தகுந்த மருத்துவரிடம் காண்பியுங்கள். பெற்றோம் பிள்ளைகளிடம்
அன்பை செலுத்துங்கள். அதிக செல்லம் கொடுக்காதீர்கள். கண்டிப்பு என்ற பெயரில் அதிகம்
திட்டாதீர்கள்.
பிள்ளைகளிடம் ஆபத்துகள்
எப்படி நடக்கும் என்பதை விளக்கி அதை அவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
பிள்ளைகள் சமூகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். சக மனிதர்களை அறிந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளை வாழ்த்துகிறேன்.
கல்வியில் வெற்றி மேல் வெற்றி பெற வழ்த்துகிறேன். பெற்றோருக்கு பெருமை கிடைக்க வாழ்த்துகிறேன்
என வைகோ பேசினார்.
No comments:
Post a Comment