Wednesday, January 13, 2016

சைக்கிள் பேரணிகள் நடந்த காலத்திலே வைகோவின் விசுவாசியின் எண்ணங்கள் ஈடேறட்டும்!

பல போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், சைக்கிள் பேரணி  என உழைத்த சைக்கிளில், 1987-ல் இருந்தே, அந்த சைக்கிளின் பெட்டியில் வைகோ படத்தை வரைந்துள்ளார் அவரின் தீவிர விசுவாசி. அந்த விசுவாசிதான் குவைத் மதிமுக வைகோ பாசறையின் அமைப்பாளர் அண்ணன் பின்னலூர் மு.மணிகண்டன் அவர்கள். அப்போது தலைவர் வைகோ அவர்கள் திமுக வில் இருந்த காலத்தில், மாவட்டம், ஒன்றியம், நகரத்திலும், கிளை கழகத்திலும் வைகோ யார் என்பதை பலருக்கு அறிமுகம் செய்தது சைக்கிள் பெட்டியில் உள்ள படம். 

அதனாலேயே அந்த நேரத்தில் திமுககாரர்களில் பலர் எதிர்ப்பை மிக அதிகமாக சம்பாதித்தவர். இந்த அனைத்து உண்மைகளும் கூடவே இருந்து பல போராட்டங்களை முன்னெடுத்த, அவரின் வழி காட்டி அண்ணன் செந்திலதிபன் அவர்களுக்கும், மற்றும் நம் கழக முன்னோடிகளுக்கும் தெரிய வாய்பிருக்கும். திமுகவில் இருந்த காலத்திலிருந்தே பல சைக்கிள் பேரணி போன்ற போராட்டங்களை சைக்கிளில் சென்றே முன்னெடுத்தவர்கள் இருவரும் ஆவர். அதில் ஒருவர்தான், இன்றைய முன்னோடிகளில் ஒருவரான அண்ணன் செந்திலதிபன் அவர் இன்றைக்கு தலைவர் வைகோவிற்கு பக்கபலமாக இயங்குகிறார்.


அண்ணன் மு.மணிகண்டன் அவர்கள், வைகோ படத்தை அன்று வரைந்து வைத்ததினால், இன்னமும் அந்த சைக்கிளை பெட்டியுடன் பாதுகாப்பாக வீட்டில் வைத்திருக்கிறார் என்பது செகிழ்ச்சியான செய்தியே.

சைக்கிள் வாசகங்களான, தென் பாண்டி சிங்கம். நாடாளுமன்றத்தின் புலி " வைகோ " என்று எழுதப்பட்டிருக்கும். 

இதையெல்லாம் கேள்விப்பட்ட, குவைத் மதிமுக வின் தலைவர் வி.தண்டாயுதபாணி அவர்கள், பின்னலூர் வந்து மு.மணிகண்டன் அவர்களின் சைக்கிளை பார்த்தது நெகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. விரைவில் தென்பாண்டி சிங்கமான தமிழின முதல்வர் வைகோ அவர்களும் பார்வையிடுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

அவர் ஓவியராக வரைந்த சில வைகோ படங்களும் காண்போர் மனதை உணர்வடையவே செய்கின்றன.

அவரது எண்ணங்கள் ஈடேற, ஒமன் மதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment